Tag Archives: வண்ணதாசன் மதிப்புரைகள்

ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்

This gallery contains 6 photos.

ஒரு முழுத் தென்னங்கீற்றுத் தோகையில், சற்றுப் பிய்ந்த ஒரே ஒரு கீற்று மட்டும் காற்றில் ஒரு பெரு நடனமிட்டு, அதன் ஊழியை அது அறிந்து ஊர்த்துவமிட்டதை எங்கள் நிலக்கோட்டை வாடகை வீட்டுத் தென்னையில் பார்த்திருக்கிறேன். ஆயிரக் கணக்கான அடர் இலைகளுடன் கவிந்து நிற்கும் ஒரு அரசமரத்தின் ஒற்றை இலை மட்டும் தன் மொத்த ஜீவனுடன் சிலிர்ப்பதை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

சுகாவுக்குப் பூசினது

This gallery contains 7 photos.

வண்ணதாசன் (சென்ற வருடம் சொல்வனம் பதிப்பகம் வெளியிட்ட சுகாவின் ‘தாயார் சன்னதி’ புத்தகம், இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு இரண்டாம் பதிப்பாக வெளியாகிறது. முதல் பதிப்புக்கு எழுத்தாளர் வண்ணதாசன் எழுதிய முன்னுரை.) சுகாவுடைய இந்தப் புத்தகத்துக்கு என்ன பெயர் என்றே தெரியாது. மனுஷனுக்குப் பெயர் வைக்கலாம். நெல்லையப்பன், கோமதிநாயகம், ஆவுடையப்பன், சங்கரலிங்கம், காந்திமதி, தெய்வானை, இசக்கி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தாவர வண்ணங்களால் வரையப்பட்ட சித்திரங்கள்

This gallery contains 8 photos.

சக்தி ஜோதியின் கவிதைகள் திறந்தே இருப்பவை. எந்தப் பிரத்தியோகச் சாவிகள், கடவுச் சொற்கள், மூன்றிலக்க எண் திருக்கல்கள் தேவைப்படாதவை அவை. காதல் எனினும், காமம் எனினும் ஒரு மொட்டு எவ்வளவு மூடியிருந்ததோ அவ்வளவு மூடுதல். ஒரு கனி தன்னை எவ்வளவு போர்த்தியிருந்ததோ அவ்வளவு போர்த்துதல் மட்டுமே. பூப்புக்கும் கனிவுக்கும் அளிக்கப்படும் இயற்கையின் எளியப் பாதுகாப்பை மட்டுமே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நானும் விகடனும்

This gallery contains 2 photos.

வண்ணதாசன் ” ‘நானும் விகடனும்’ தொடர் ஆரம்பித்த புதிது. பாலகுமாரன், கோபுலுவைப்பற்றி எழுதியிருந்தார். எனக்கும் கணபதி அண்ணனுக்கும் கோபுலு பிடிக்கும். கணபதி அண்ணன் ரொம்ப சந்தோஷமாகத் தொலைபேசினான். ‘நீ எழுத வேண்டியதை பாலகுமாரன் எழுதியாச்சு’ என்றான். ‘நீ எப்போ எழுதப்போறே?’ என்றும், ‘உன்கிட்டே கண்டிப்பாக் கேட்பாங்க. இப்பமே எழுதிவெச்சுக்கோ’ என்றும் சொன்னான். நான் விடிந்த பிறகுதான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் கடிதங்களில் வாழ்வின் வண்ணங்கள்…தி. சுபாஷிணி

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2010ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் பன்னிரண்டாம் நாளின் பொன் மாலைப் பொழுது. மழைபெய்து ஒய்ந்து இரு நாட்களாகியதால் காய்ந்தும் காயாமலும் அடி ஈரம் காக்கப்பட்ட மண் தரை. இதை ரகசியமாய்ப் பாதுகாத்த வாதாம் இலை பழுப்புச் சருகுகள். சருகுகள் மேல் விழுந்த பூக்கள்.  பூக்களின் மேலும், … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எஸ்.ராமகிருஷ்ணன்-உள்ளங்கை எழுத்து

வண்ணதாசன்: உள்ளங்கை எழுத்து-   எஸ்.ராமகிருஷ்ணன்   ஏதேதோ ஊர்சுற்றி நான் அறிந்து கொண்ட நிசப்தத்தை வண்ணதாசன் தன் இருப்பிடத்தில் இருந்துகொண்டே அறிந்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியாக உள்ளது அவரது ‘கூறல்’ என்ற கதை. ‘ஒரு துண்டு தோசை வாயில் இருக்கிற நிலையிலே தாத்தா அழுவதைப் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியவில்லை’ என்று துவங்கும் இக்கதை, காது கேளாத ஒரு … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என் கையில் விழுந்த சாக்லேட்!

என் கையில் விழுந்த சாக்லேட்! “வண்ணதாசன்” எழுதிய “அகம், புறம்” அனுபவக் கட்டுரைத் தொடரில் நான் ரசித்த பகுதியை இங்கே போடுகிறேன். “பெயரை அறிவது ஒரு நெருக்கம் உண்டாக்குகிறது அல்லவா? அந்த உணர்வுடன் தான் சேர்ந்த வேலை, இப்போது செய்கிற வேலை, சம்பளம், குழந்தைகள் பற்றி எல்லாம் அந்தப் பெண் சொல்லிப் பகிர்ந்திருக்கிறார். “ஒரு தோழமை … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜெயமோகன் சொல்கிறார்

ஜெயமோகன் சொல்கிறார் சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிலசமயம் மழைக்குப்பிந்தைய இளவெயிலாக காற்று விரிந்து கிடப்பதை நாம் காண நேர்வதுண்டு. சிலசமயம் இருளில் நாம் ஆழ்ந்த தனிமையுடன் துயருடன் இருக்கையில் நம்முடன் மிக அந்தரங்கமாக காற்றும் இருப்பதுண்டு. இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சின்னு எனும் சங்கீதம்

சின்னு எனும் சங்கீதம் எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்ந்து கெட்டவர்கள் எப்போதுமே தங்கள் கண்களில் மாறாத துக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மறைக்க முயன்றாலும் கடந்தகாலம் அந்த முகங்களில் மாறாத சோகமாகப் படிந்துதானிருக்கிறது. சொற்களை அளந்து பேசுவதோடு சிரிப்பைக் கூட அளவாகவே வெளிப்படுத்துகிறார்கள். அதுவும் பெண்களாக இருந்துவிட்டால் அவர்கள் கூந்தலில் கூட அந்த வேதனை ஒட்டிக் கொண்டிருக்கிறது. நடை மாறிவிடுகிறது. … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

வண்ணதாசனின் தனுமை

விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘) பாவண்ணன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60210273&format=html நெருக்கமான வாசகர் அவர். ஓராண்டுக்கும் மேலாகப் பார்த்துக்கொள்ள இயலாமல் சூழல் நெருக்கடியானதாக மாறிப் போனது. திடுமென ஒருநாள் இரவில் தொலைபேசியில் அழைத்தார். மறுநாள் பெளர்ணமி. ஞாயிறும் கூட. ஒக்கேனக்கல் அருவியில் நல்ல குளியல் போடலாம் வாருங்களேன் என்றார். விடிந்ததும் கிளம்பி … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக