வீட்டுக்கு வந்திருந்த
குட்டிப் பெண்ணுக்கு
தரையில் இடது கை விரித்து
சாக்பீஸால்
விரல்கள் வரைந்தேன்
சுண்டு விரல், மோதிர விரல்
வரைந்த எனக்கு,
சாலை விபத்தில் இறந்த
யாரோ ஒருவரைச் சுற்றிய
தடயக் கோடுகளின்
வெள்ளை ஞாபகம் வந்தது.
அந்தக் குட்டிப் பெண்ணுக்கும்
அப்படித் தோன்றுமோ
என்ற பயத்தில்
எப்படி வரைய மீதியிருக்கும்
எல்லா விரலகளையும்?
………………………………………………………………………..கல்யாண்ஜி
Advertisements
தொகுப்பில் படித்து ரசித்திருந்தாலும், தெவிட்டாத சுவை எத்தனை முறை படிக்க வாய்த்தாலும்! வரையாமல் மீதமான விரல்களின் நியாயம் போல!!
அனைத்துக்கும் மூலமான ஆதிபகவனை அனேக உருவங்களில் அனேக இடங்களில் இருத்திக் கொண்டாடுவது போல் பதிவுகள்தோறும் பலவித தோற்றங்களில் எங்கள் எழுத்தாசான் காணக் காணப் பரவசம்! நன்றி திரு.சுல்தான் அவர்களே!
அருமை.