Category Archives: கல்யாண்ஜி கவிதைகள்

ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை

This gallery contains 1 photo.

சாம்ராஜ் ஏறக்குறைய அரை நூற்றாண்டாக கல்யாண்ஜி தமிழ்க் கவிதையின் மீது தவிர்க்க முடியாத தாக்கம் செலுத்துபவர். பறவைகள், எளிய மனிதர்கள், சிறியதன் அழகு, பூச்சிகள், மலைகள், ஆறுகள், அருவி, தாவரங்கள், மழை, பூக்கள், வீட்டு மிருகங்கள், அடிப்படை மனிதாபிமானம், ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறிய ஒரு நுண்ணோக்கி இவையே இவரது கவி உலகின் கூடுதல் புழக்கமுள்ள பொருட்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மகத்தான அனுபவங்கள்

This gallery contains 2 photos.

இப்படித்தானிருக்கும் என்று ஏற்றுக் கொள்ளாதீர்கள். எப்படியுமிருக்கட்டும் என்று விட்டு விடாதீர்கள். மேல் நிலைத் தொட்டி நிரம்புகிற வேகம், குடி தண்ணீர்க் குழாய் திறந்து வழிகிற வேகம் இரண்டையும் தந்து எப்போது நிரம்பும் அது என்று விடை சொல்லச் சொல்வார்கள். விடைகளுக்காகக் குழம்பாதீர்கள். உங்களுக்குத் தாகமாக இருந்தல் முதலில் தண்ணீர் அருந்துங்கள். கரைகளுக்கும், கறைகளுக்கும் இடையே உள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

தரையில் விழுந்த பூ

This gallery contains 1 photo.

கல்யாண்ஜி வரவேற்பு வாசலில் எடுத்துக் கொள்ள காம்புடன் ரோஜா பூ வைத்திருந்தார்கள். ஏற்கனவே அவை புத்தம் புதுப் பூ. இவள் தேர்ந்துகொண்டதோ புதிதினும் புதிய பூ. பேசிக்கொண்டே செருகினால் எப்படி? சரியாய் அமராமல் கீழே விழுந்தது. குனிந்து எடுத்துக் கொண்டு மறுபடி சூடிக் கொண்டால் என்ன? இன்னொரு பூவை எடுத்தாள், தலையில் வைத்தாள். போய்க்கொண்டிருந்தாள். தரையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

பரவச ஈக்கள்

This gallery contains 4 photos.

கல்யாண்ஜி நூறு இருக்கும், ஆயிரம் இருக்கும் அதற்க்கு கூடுதலாகவும் மீன்கூடையின் ஈயவிளிம்பில் மரணத்தின் உப்பு வாசனை மொய்க்கும் பரவச ஈக்கள் பார்க்க பார்க்க மினுமினுத்தன எத்தனை கோடியோ இன்பம் வைத்த சிறகுகள். இத்தனையும் வண்ணத்துப் பூச்சிகளாக இருந்துவிடும் எனில், அவை அமர அத்தனை எண்ணிக்கைப் பூக்களுக்கு எங்கே போவேன் நான் என் சிவனே. ஓவியம்: மணி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

வானவில்

This gallery contains 8 photos.

கல்யாண்ஜி  

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

மணல் உள்ள ஆறு தொகுப்பு பற்றி மரபின் மைந்தன் முத்தையா

This gallery contains 1 photo.

புரிதலின் பிராவாகம் அது அங்கே இருக்கிறது என்று சொல்வதில் எந்தப் புகாராவது இருக்கிறதா என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதுவொரு சாதாரண வாக்கியம். அதன் அடியாழத்திலோ “அது அது அப்படித்தான்” என்கிற புரிதலின் பரிவு நீண்டு கிடக்கிறது.புரிதல், பக்குவத்தின் ஆரம்ப நிலை.புரிதலின் பரிவு,பக்குவத்தின் ஆனந்த நிலை. அப்படியோர் ஆனந்த நிலையின் பிரவாகமாய்ப் பெருகுகிறது கல்யாண்ஜியின் “மணல் உள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இதற்க்குமேல்

This gallery contains 2 photos.

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி

This gallery contains 1 photo.

http://uyirmmai.blogspot.com/2005/02/5.html பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது ஆவி பறக்கிற உன் காமம். பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற வக்கிரம் அனைத்தையும் உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது. காணாமல்போன சீப்பைமுன் வைத்து நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம். மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு நீர் வார்க்கிறது உன் முத்தம். விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை என் வாயோரங்களிலிருந்து துடைத்துக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வரைபடம்

This gallery contains 1 photo.

    வாசலில் வந்துநின்று கெஞ்சிய விற்பனைப் பெண்ணிடம் வாங்கியது அந்த உலக வரைபடம். படுக்கையறைத் தலை மாட்டில் தொங்கவிடப்பட்ட அதைப்பார்த்து நம் ஊர் எங்கே என்றாள். நம் வீடு இருக்கும் இடம் எது என்பதற்கும் வரைபடத்தில் புள்ளியில்லை. அவள் பள்ளிக் கூடம், அவள் சினேகிதி சுலேகா வீடு பற்றி மேற்கொண்டு என்னிடம் கேட்பதில் பயனில்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அவரும் நானும்

This gallery contains 2 photos.

  சந்தடியற்ற ரயில் நிலையத்தில் பரிச்சயமற்ற அவரும் நானும். ‘இந்த இடத்தில் ஒரு பெரிய அரசமரம் உண்டு தெரியுமா?’ என்றார். ‘ஏகப்பட்ட சிட்டுக் குருவிகள் அடைகிற சத்தம் கேட்டிருக்கிறீர்களா?’ என்றேன். அவர் இறந்த காலத்தில் குனிந்து பழுப்பு இலைகளைப் பொறுக்க, நான் மூச்சிழுத்து நுகர்ந்துகொண்டிருந்தேன் பறந்து போன எச்சச் சொட்டுகளை, தண்டவாளங்கள் விம்மிக்கொண்டிருக்க. …………………………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வெயில் முடிவு

This gallery contains 1 photo.

ஒரு முடிவு செய்தது போல் எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டிருந்தது செடி. ஒரு முடிவும் செய்ய முடியாதது போல் செடியடியில் அசையாதிருக்கிறது சாம்பல் பூனை. ஒரு முடிவும் செய்ய அவசியமின்றி ஊர்ந்துகொண்டே இருக்கிறது செடியின் மேல் வெயில். ………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நகர்வு

This gallery contains 2 photos.

    ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும் பிடித்திருக்கிறது அசைந்து மிதந்துவரும் பூவை. அது தங்களுக்கு  என்று நினைத்து நீந்துகிறார்கள் அதன் திசையில். பூவோ நகர்கிறது நீச்சல் தெரியாது ஆறு பார்த்து அமர்ந்திருக்கும் சிறு பெண் நோக்கி. ……………………………………………………………………..கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சாயல்

This gallery contains 1 photo.

என் சின்ன வயதில் சட்டையில்லாத அப்பா எப்படியோ இருப்பார். அவருடைய தளர்ந்த இந்த வயதில் சட்டை போட்டால் அப்பா எப்படியோ இருக்கிறார். அப்படியே இல்லாமல் இருப்பதுதான் அவருடைய சாயல் போல. ………………………………………………………………..கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எளிய கேள்விகளின் மேல்

This gallery contains 2 photos.

    சாய்ந்து வளர்ந்து பூச்சொரியும் சிவப்பு மரமல்லி மரம் தன் கிளைகளைப் பாதிக்கு மேல்  தெருவுக்குத் தர அனுமதித்து சுற்றுச் சுவரை இடித்துவிட்ட கருணைமிக்கவர் யார் இந்த வீட்டில்? சதா யாருடனாவது பேசிக்கொண்டே பழுதுற்ற கண்ணுடன் சூரியன் பார்த்துச் சிரிக்கும் முதிய காவலரின் கனவில் சமீபத்தில் அம்மன்புரத்துப் பனைவிடலி அசைந்ததுண்டா? ஏழு செவலைக்குட்டிகளுக்கும் இன்னும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

யாரிடம்

This gallery contains 1 photo.

    அவுரிச் செடி மூட்டில் அமர்ந்திருக்கும்  இப் பறவையின் பெயர் என்னவென யாராவது கேட்டால் சொல்லிவிடலாம். பெயர் தெரிந்தது போல் எல்லோரும் பெயர் தெரியாத பறவையைத் தாண்டிப் போய்க் கொண்டிருகிறார்கள். யாரிடமாவது சொல்வதற்குள் பறந்துவிட்டதெனில் யாரிடம் சொல்வேன் செம்போத்து எனும் பெயரை? ……………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தெரிந்து செயல் வகை

This gallery contains 2 photos.

தெரியும். கொஞ்சம் உரைநடைத்தன்மை அதிகம். தெரிந்துதான் இப்படி எழுதினேன். அல்லது எழுதின உடனேயே தெரிந்துகொண்டேன், இவை இப்படி இருக்கின்றன என்று. எப்படி எப்படியெல்லாமோ இருக்கிற, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என உரிமம் பெற்றது போல எழுதப்படுகிற இன்றைய நவீன கவிதைகளின் போக்கில், இப்படி இருப்பதற்கும் இடமும் பொருளும் ஏவலும் உண்டு நிறையவே. கதைக்காரர்கள் அனுபவச் சாற்றின் கடைசிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மீதியிருக்கும் விரல்கள்

This gallery contains 1 photo.

வீட்டுக்கு வந்திருந்த குட்டிப் பெண்ணுக்கு தரையில் இடது கை விரித்து சாக்பீஸால் விரல்கள் வரைந்தேன் சுண்டு விரல், மோதிர விரல் வரைந்த எனக்கு, சாலை விபத்தில் இறந்த யாரோ ஒருவரைச் சுற்றிய தடயக் கோடுகளின் வெள்ளை ஞாபகம் வந்தது. அந்தக் குட்டிப் பெண்ணுக்கும் அப்படித் தோன்றுமோ என்ற பயத்தில் எப்படி வரைய மீதியிருக்கும் எல்லா விரலகளையும்? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நான்காவது

This gallery contains 1 photo.

  இல்லாத ஒரு நான்காவது நாயுடன் விளையாடுவது போல புரண்டுகொண்டு இருக்கின்றன காலை வேம்பின் கசப்பு நிழலில் மூன்று நாய்கள் …………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்