அன்பெனும் தனி ஊசல்

This gallery contains 1 photo.

  அன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா நிறையத் தயக்கங்களுக்குப் பின் நினைவும் புனைவுமாக நான் எனது ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்த சமயம். என் வாழ்வின் வெவ்வேறு சம்பவங்கள் ஒரு மாயம் போல, தாமாகவே ஒன்றுக்கொன்று முடிச்சிட்டுக் கொண்டு துயர் பாதியும் கேலி பாதியுமாக ஒவ்வொரு வாரமும் கதைக் கட்டுரைகளாக நீண்டுகொண்டிருந்தன. தட்டச்சு செய்வது … Continue reading

Gallery | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனுக்கு குங்குமத்தின் வாழ்த்துகள்.

vanna1

Image | Posted on by | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

This gallery contains 1 photo.

ஜெயமோகன் http://www.jeyamohan.in/91287#.WAJK7-B96Uk 2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும். எழுதவந்த நாள் முதல் தமிழில் ஒரு நட்சத்திரமாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் தவறாகவே வாசிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, முன்னோடி விமர்சகரான சுந்தர ராமசாமி அவரைப்பற்றி அரைகுறையாக வகுத்துரைத்தது. வாழ்க்கையின் நெகிழ்ச்சியான கணங்களை … Continue reading

Gallery | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

புத்தகத் திருவிழா ஸ்பெஷல்

page_66

Image | Posted on by | 3 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் அவர்களின் இன்று… ஒன்று… நன்று !

This gallery contains 1 photo.

http://www.sinthanaipookal.blogspot.in/2013/04/blog-post.html வண்ணதாசன் அவர்களின் இன்று… ஒன்று… நன்று ! பகுதியை விகடன் அன்பளிப்பாய் கேட்க நேர்ந்தது. நிச்சயம் தித்திப்பான ஆச்சர்ய அனுபவம்.. இது நிச்சயம் மிக மிக உபயோகமான பங்களிப்பு விகடன் மூலம்.. நிறைய எழுத்தாளர்களின் எழுத்தை வாசித்த நமக்கு, அவர்களின் குரலை கேட்கும் பாக்கியம் கிட்டுவதில்லை. சமீபத்தில் ஒரு ப்ரொவ்சிங் சென்டரில் ஆச்சர்யமாக ஒரு … Continue reading

Gallery | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

அம்பைக்கு.. வண்ணதாசன் கடிதம்

This gallery contains 1 photo.

Gallery | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

தண்டவாளங்களைத் தாண்டுகின்றவர்கள்

This gallery contains 15 photos.

வண்ணதாசன் (ஆனந்த விகடன் தீபாவளி மலர்) ஓவியம்: ஹாசிப்கான்

Gallery | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

வெண்கடல்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   அன்புமிக்க ஜெயமோஹன், வணக்கம். கனவுகள் காண்கிற அதிர்ஷ்டம் இப்போது அனேகமாகக் குறைந்துவிட்டது. இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நேற்று கனவு காணும் துரதிர்ஷ்டம் எனக்கு. எங்கள் மகள் சங்கரி தாங்க முடியாமல் அழுதுகொண்டு நிற்கிறாள். நானும் அவளுடன் வாய்விட்டு அழுதபடி அவளை எங்கள் பூர்வீக வீட்டிற்கு, அதுவும் எங்கள் அம்மாவைப் பெற்ற ஆச்சி … Continue reading

Gallery | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இலக்கியத்திற்க்கு எதிர்பார்ப்பு இல்லை

This gallery contains 2 photos.

வண்ணதாசன் தினகரன்  வணக்கம் திங்கள் 12 – 08 – 2013 நெல்லை பதிப்பு  

Gallery | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

கனியான பின்னும் நுனியில் பூ

This gallery contains 1 photo.

வண்ணதாசன் இந்தக் கடையில் வாங்கி விடுவோமா?’ நான் தினகரியைக் கேட்கும்போது அவள் குனிந்து குனிந்து வாகைப் பூக்களைப் பொறுக்கி உள்ளங்கையில் வைத்துக்கொண்டுஇருந்தாள். திரிச்சூர் பூரத் திருவிழாவில் யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, ஒவ்வொரு பூவும் சிவப்புக் குஞ்சமும் காம்புமாக இருந்தது. அவ்வளவு பெரிய வாகைமரத்தின் கீழ் நான் நிறுத்திய வண்டியின் … Continue reading

Gallery | Tagged , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

மழை

This gallery contains 1 photo.

ஞாபகமிருக்கிறதா? பத்து இருபது நாட்களுக்கு முன்பு சென்னையிலே மழை பெய்தது. மழைக்கு என்ன அது எல்லா ஊரிலும்தான் பெய்யும். எல்லோருக்காகவும் பெய்யும். அன்று சென்னையில் மழை பெய்யது அவ்வளவுதான்.  மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. சிலசமயம் இரவு முழுவதும் விடியவிடிய. சிலசமயம் விடியும்போது அதிகாலையில். நான் பார்த்த சென்னை மழை … Continue reading

Gallery | Tagged , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

புது வருட வாழ்த்துக்கள்

புது வருட வாழ்த்துக்கள்.

https://vannathasan.wordpress.com/2012/annual-report/

Posted in அனைத்தும் | 6 பின்னூட்டங்கள்

இன்று ஒன்று நன்று-சந்தோஷப்படுங்கள்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் சந்தோஷப்படுங்கள் நடைபயிற்சி செய்யும்போது உங்களுடைய பாதத்தை பாதி கடித்தும் கடிக்காததுமாக பச்சையும் மஞ்சளுமான நிறத்தில் ஒரு மாம்பழம் தடுக்கியதா? இன்று உங்கள் வீட்டில் வாசல் தெளிக்கையில் நேற்றுப்போட்ட கோலத்தின் மேல் செக்கச்சிவப்பாக ஒரு வாதாம்பழம் கிடந்ததா? பள்ளிக்கூடத்திலிருந்து வருகிற உங்கள் பிள்ளையின் கையில் ஒரு காக்கைச்சிறகு இருக்கிறதா? சந்தோஷப்படுங்கள்! உங்களுடைய இந்த நாள் நன்றாகத் … Continue reading

Gallery | Tagged , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

வண்ணதாசனின் இன்று ஒன்று நன்று- தேரோட்டம்

This gallery contains 2 photos.

வண்ணதாசன் தேரோட்டம் நான் வண்ணதாசன் பேசுகிறேன். இதுவரை எழுத்துகள் மூலமாக உங்களை அடைந்த நான் குரலின் மூலமாக இன்று ஒன்று நன்று எனத் தொடுகிறேன். சமீபத்தில் தான் எங்கள் ஊரில் தேரோட்டம் முடிந்தது. ஒவ்வொரு வருசமும் ஆனி மாதம் தேரோடும். இந்த வருடம் ஆனித்திருவிழாவிற்கு நான் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது. வேறென்றைக்கும் இல்லாவிட்டாலும் தேரோட்டத்தன்றைக்கு எப்படியாவது … Continue reading

Gallery | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

நிலா பார்த்தல்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   இப்போது எத்தனை பேர் நிலா பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? அல்லது ஏற்கனவே இன்று நிலா பார்த்தீர்கள்? நான் எப்போதெல்லாம் இப்படி ஒரு பௌர்ணமி நிலவைப் பார்க்க நேர்கிறதோ அப்போதெல்லாம் யாரையாவது அதைப் பார்க்கச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். மதுரை பிச்சைப்பிள்ளைச் சாவடியில் பார்த்த நிலாவை ரவிசுப்ரமணியனைப் பார்க்கச் சொன்னேன். அம்பாசமுத்திரத்தில் வேலை பார்த்த நாட்கள் ஒன்றில் … Continue reading

Gallery | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சிலுக்கு-வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் அன்புமிக்க நாஞ்சில் நாடன், வணக்கம். உங்களுக்கு மின்னஞ்சல் பெட்டியைத் திறந்துபார்க்கும் ‘சீக்கு’ உண்டா தெரியவில்லை. அது ஒருவிதமான ஒட்டுவாரொட்டி. ஒருவிதமான சூது.  சொரிமணல். ஆளை உள்ளே இழுக்கும். ஆனால், நீங்கள் அப்படியெல்லாம் லேசில் ஆழம் தெரியாமல் கசத்தில் இறங்குகிற ஆள் இல்லை. * நான் ‘இந்த என்னுடைய அறுபத்தாறு வயசில்,’இன்னியத் தேதி’ வரைக்கும் இவ்வளவு சந்தோஷமாக … Continue reading

Gallery | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த வண்ணதாசன் சிறுகதைகள்

This gallery contains 1 photo.

by RV மேல் ஐப்பசி 1, 2012 ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் என்னுடைய reference-களில் ஒன்று. தோழி அருணா இந்த சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். எல்லா கதைகளுக்கும் இன்னும் சுட்டி கிடைக்கவில்லை. கிடைக்கும்போது அருணாவோ நானோசெந்திலோ அப்டேட் செய்கிறோம். Formatting பிரச்சினையால் இத்தனை நாள் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன், இதற்கு மேல் பொறுமை இல்லை. dt, dd syntax ஏன் சரியாக வேலை … Continue reading

Gallery | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வண்ணதாசனுடன் பேசுங்கள் 19-7-2012 முதல் 25-7-2012வரை

This gallery contains 1 photo.

இன்று… ஒன்று… நன்று! விகடன் வாசகர்களுக்கு வணக்கம்… நான் வண்ணதாசன்… இதுவரை என் கதை, கவிதை கள் மூலம் உங்களோடு உரையாடியவன் இப்போது நேரடியாகப் பேசவிருக்கிறேன்! நடைப் பயிற்சியின்போது பாதி மாம்பழம் உங்களைத் தடுக்கினால், நேற்று போட்ட வாதாம்பழம் கிடந்தால், இயற்கையை ஒட்டித்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் எனச் சந்தோஷப்படுங்கள். கடவுள் துகளையே கைக்கொண்டு நாட்கள் … Continue reading

Gallery | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்