Category Archives: வண்ணதாசன் மதிப்புரைகள்

சுவையாகி வருவது -1.2 ஜெயமோகன்

This gallery contains 1 photo.

ஜெயமோகன் முதல் பகுதியை படிக்க :http://www.jeyamohan.in/93505#.WFtDCPl96Uk [   2  ] வண்ணதாசனின் புனைவுலகை சுவை என்னும் சொல்லால் அடையாளப்படுத்தலாம். அவருடைய தீவிர வாசகர்கள் அனைவருமே அவர் தங்களுக்கு அளித்த தனிப்பட்ட சுவையனுபவத்தைப்பற்றியே பெரிதும் பேசுகிறார்கள். வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர், நெல்லையின் பண்பாட்டுத் தனித்தன்மையை வெளிக்கொணர்ந்தவர், மனிதர்களின் நுண்ணிய முகங்களை வெளிப்படுத்தியவர், என்றெல்லாம் வாசகர்களால் பல்வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வெண்கடல்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   அன்புமிக்க ஜெயமோஹன், வணக்கம். கனவுகள் காண்கிற அதிர்ஷ்டம் இப்போது அனேகமாகக் குறைந்துவிட்டது. இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நேற்று கனவு காணும் துரதிர்ஷ்டம் எனக்கு. எங்கள் மகள் சங்கரி தாங்க முடியாமல் அழுதுகொண்டு நிற்கிறாள். நானும் அவளுடன் வாய்விட்டு அழுதபடி அவளை எங்கள் பூர்வீக வீட்டிற்கு, அதுவும் எங்கள் அம்மாவைப் பெற்ற ஆச்சி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்

This gallery contains 6 photos.

ஒரு முழுத் தென்னங்கீற்றுத் தோகையில், சற்றுப் பிய்ந்த ஒரே ஒரு கீற்று மட்டும் காற்றில் ஒரு பெரு நடனமிட்டு, அதன் ஊழியை அது அறிந்து ஊர்த்துவமிட்டதை எங்கள் நிலக்கோட்டை வாடகை வீட்டுத் தென்னையில் பார்த்திருக்கிறேன். ஆயிரக் கணக்கான அடர் இலைகளுடன் கவிந்து நிற்கும் ஒரு அரசமரத்தின் ஒற்றை இலை மட்டும் தன் மொத்த ஜீவனுடன் சிலிர்ப்பதை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

மணல் உள்ள ஆறு தொகுப்பு பற்றி மரபின் மைந்தன் முத்தையா

This gallery contains 1 photo.

புரிதலின் பிராவாகம் அது அங்கே இருக்கிறது என்று சொல்வதில் எந்தப் புகாராவது இருக்கிறதா என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதுவொரு சாதாரண வாக்கியம். அதன் அடியாழத்திலோ “அது அது அப்படித்தான்” என்கிற புரிதலின் பரிவு நீண்டு கிடக்கிறது.புரிதல், பக்குவத்தின் ஆரம்ப நிலை.புரிதலின் பரிவு,பக்குவத்தின் ஆனந்த நிலை. அப்படியோர் ஆனந்த நிலையின் பிரவாகமாய்ப் பெருகுகிறது கல்யாண்ஜியின் “மணல் உள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கிருஷ்ணன் வைத்த வீடு – ஆனந்த் ராகவ்

This gallery contains 1 photo.

 MY Book review of Vannadasan’s Book ” கிருஷ்ணன் வைத்த வீடு “  for http://www.justbooksclc.com  கவிதை எழுதும் கவிஞர்களும், சிறுகதைகள்  எழுதும் எழுத்தாளர்களும் தனித்தனியே இயங்குகிற இலக்கியச் சூழலில்   கவிதை போலவே கதை எழுதும் எழுத்தாளர்கள் அபூர்வமாகத்தான் தோன்றுகிறார்கள். வண்ணதாசன் என்கிற சிறுகதையாளர் அதில் முதன்மையானவர். கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சுகாவுக்குப் பூசினது

This gallery contains 7 photos.

வண்ணதாசன் (சென்ற வருடம் சொல்வனம் பதிப்பகம் வெளியிட்ட சுகாவின் ‘தாயார் சன்னதி’ புத்தகம், இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு இரண்டாம் பதிப்பாக வெளியாகிறது. முதல் பதிப்புக்கு எழுத்தாளர் வண்ணதாசன் எழுதிய முன்னுரை.) சுகாவுடைய இந்தப் புத்தகத்துக்கு என்ன பெயர் என்றே தெரியாது. மனுஷனுக்குப் பெயர் வைக்கலாம். நெல்லையப்பன், கோமதிநாயகம், ஆவுடையப்பன், சங்கரலிங்கம், காந்திமதி, தெய்வானை, இசக்கி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தாவர வண்ணங்களால் வரையப்பட்ட சித்திரங்கள்

This gallery contains 8 photos.

சக்தி ஜோதியின் கவிதைகள் திறந்தே இருப்பவை. எந்தப் பிரத்தியோகச் சாவிகள், கடவுச் சொற்கள், மூன்றிலக்க எண் திருக்கல்கள் தேவைப்படாதவை அவை. காதல் எனினும், காமம் எனினும் ஒரு மொட்டு எவ்வளவு மூடியிருந்ததோ அவ்வளவு மூடுதல். ஒரு கனி தன்னை எவ்வளவு போர்த்தியிருந்ததோ அவ்வளவு போர்த்துதல் மட்டுமே. பூப்புக்கும் கனிவுக்கும் அளிக்கப்படும் இயற்கையின் எளியப் பாதுகாப்பை மட்டுமே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எஸ்.ஐ.சுல்தானுக்கு – வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 5 photos.

சலாகுதீன் சார் தன் மகள் கல்யாணத்தில் அதுவரைப் பார்த்திராத இன்னொரு முகத்துடன் இருந்தார். ஏற்கனவே எது நிஜமானது எது பொய்யானது என்பதை அறிந்த அவருக்கு அந்த தினத்தின் மலர்ச்சி நிரந்தரமாக இருந்திருக்கலாம். ஆண்டவனின் பேரேட்டில் நிஜம் வேறு சொற்களில் எழுதப்பட்டிருக்கிறது போல. வண்ணதாசன்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நானும் விகடனும்

This gallery contains 2 photos.

வண்ணதாசன் ” ‘நானும் விகடனும்’ தொடர் ஆரம்பித்த புதிது. பாலகுமாரன், கோபுலுவைப்பற்றி எழுதியிருந்தார். எனக்கும் கணபதி அண்ணனுக்கும் கோபுலு பிடிக்கும். கணபதி அண்ணன் ரொம்ப சந்தோஷமாகத் தொலைபேசினான். ‘நீ எழுத வேண்டியதை பாலகுமாரன் எழுதியாச்சு’ என்றான். ‘நீ எப்போ எழுதப்போறே?’ என்றும், ‘உன்கிட்டே கண்டிப்பாக் கேட்பாங்க. இப்பமே எழுதிவெச்சுக்கோ’ என்றும் சொன்னான். நான் விடிந்த பிறகுதான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கருப்புப்பசு(என்கிற)பாத்திமா

வண்ணதாசன் sis

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் கடிதங்களில் வாழ்வின் வண்ணங்கள்…தி. சுபாஷிணி

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2010ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் பன்னிரண்டாம் நாளின் பொன் மாலைப் பொழுது. மழைபெய்து ஒய்ந்து இரு நாட்களாகியதால் காய்ந்தும் காயாமலும் அடி ஈரம் காக்கப்பட்ட மண் தரை. இதை ரகசியமாய்ப் பாதுகாத்த வாதாம் இலை பழுப்புச் சருகுகள். சருகுகள் மேல் விழுந்த பூக்கள்.  பூக்களின் மேலும், … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் சொல்கிறார்

ஜெயமோகன் சொல்கிறார் சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிலசமயம் மழைக்குப்பிந்தைய இளவெயிலாக காற்று விரிந்து கிடப்பதை நாம் காண நேர்வதுண்டு. சிலசமயம் இருளில் நாம் ஆழ்ந்த தனிமையுடன் துயருடன் இருக்கையில் நம்முடன் மிக அந்தரங்கமாக காற்றும் இருப்பதுண்டு. இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்

வாசகர் வட்டம்  வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள் http://vasagarvattam.blogspot.com/2008/03/blog-post.html  வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள் பாண்டித்துரை வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளையும் என்னால் படிக்க இயலவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 117 சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் 60க்கும் மிகுதியான சிறுகதைகள் படித்துள்ளேன். திரு சுப்ரமண்யம் ரமேஷ் குறிப்பிட்ட கதைகளில் தனுமை தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் சமவெளி … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

சின்னு எனும் சங்கீதம்

சின்னு எனும் சங்கீதம் எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்ந்து கெட்டவர்கள் எப்போதுமே தங்கள் கண்களில் மாறாத துக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மறைக்க முயன்றாலும் கடந்தகாலம் அந்த முகங்களில் மாறாத சோகமாகப் படிந்துதானிருக்கிறது. சொற்களை அளந்து பேசுவதோடு சிரிப்பைக் கூட அளவாகவே வெளிப்படுத்துகிறார்கள். அதுவும் பெண்களாக இருந்துவிட்டால் அவர்கள் கூந்தலில் கூட அந்த வேதனை ஒட்டிக் கொண்டிருக்கிறது. நடை மாறிவிடுகிறது. … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

கதாவிலாசம் உள்ளங்கை எழுத்து

வண்ணதாசன் http://www.vikatan.com/av/2005/apr/03042005/av0702.asp கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளங்கை எழுத்து ‘புல்லைக் காட்டிலும் வேகமாக வளர்வது எது?’ என்று கேட்கும் யட்சனுக்கு, ‘கவலை!’ எனப் பதில் சொல்கிறான் யுதிஷ்டிரன். மகாபாரதத்தில் வரும் இந்த ஒற்றை வரி, இன்றைக்கும் மனதில் ஒரு நாணல் போல அசைந்து கொண்டே இருக்கிறது. உதிர்ந்து கிடக்கும் மயிலிறகைக் கையில் எடுத்துப் பார்க்கும்போது, மயிலின் கம்பீரம் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் எழுத்துமுறை

இவர்களது எழுத்துமுறை – 7 –வண்ணதாசன் வே.சபாநாயகம். http://www.thinnai.com/?module=displaystory&story_id=61009192&format=html 1. லா.ச.ராவுக்குப்பின் தமிழ் இலக்கியத்தில் உங்கள் மொழிநடை(style) மிகவும் தனித்துவமானது என்பது பற்றி? என்னோட ‘ஸ்டைல்’ எனக்குத் தடையா இருக்குன்னுதான் நெனக்கிறேன். என்னை அது கட்டிப் போடுது. இது யாருக்கும் நடக்கக்கூடாதுன்னு நெனக்கிறேன். எந்த ஒரு எழுத்தாளனின் ஸ்டைலும் அவனைக் கட்டிப் போடக் கூடாது. நானே … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனின் தனுமை

விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘) பாவண்ணன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60210273&format=html நெருக்கமான வாசகர் அவர். ஓராண்டுக்கும் மேலாகப் பார்த்துக்கொள்ள இயலாமல் சூழல் நெருக்கடியானதாக மாறிப் போனது. திடுமென ஒருநாள் இரவில் தொலைபேசியில் அழைத்தார். மறுநாள் பெளர்ணமி. ஞாயிறும் கூட. ஒக்கேனக்கல் அருவியில் நல்ல குளியல் போடலாம் வாருங்களேன் என்றார். விடிந்ததும் கிளம்பி … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக