Monthly Archives: ஒக்ரோபர் 2011

குறுக்கிட்ட என்னை

This gallery contains 2 photos.

அந்தக்காட்சியே சற்று வினோதமாக இருந்தது. மிகச் சிறிய வீட்டின் பக்கவாட்டு விஸ்தரிப்பாக செங்கல் கட்டுமானம் ஆகிக்கொண்டிருந்தது. இடம் பெயர்ந்து எங்கோ காணாமல் போன பித்தளைச் செம்பொன்று காலத்தில் சரிந்த நார்க்கட்டில் கீழ் இருந்தது. மிக உரத்த வசைகளைச் சொல்லி பாம்படம் அணிந்த முதிய கிழவியை சீக்கிரம் செத்துப் போகச் சொன்னான் போதையில் இருந்தவன். தென்னோலைச் சிலுவையை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நிறமற்ற

This gallery contains 1 photo.

    இத்தனை நீலச் சிறுமீன்கள் மொய்க்கும் நீலக் குளத்தில் நீச்சல் தெரியாமல் குதித்தேன். இப்போது நீலமாக நீந்துகிறேன் குளமும் மீன்களும் நிறமற்ற பளிங்காக. ………………………………………………………………………………………………..கல்யாண்ஜி … ….. ….. …. …….. …… …. …. ….. …… ……. … … ……. ….. …. ….. … ……. …. … … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறவையையும் சேர்த்து

This gallery contains 1 photo.

இந்தக் கிளையில் அந்தப் பறவை அமர்ந்திருந்ததை இந்தக் கிளையில் அமர்ந்து அந்தப் பறவை பறந்து சென்ற பின்னரும் இந்தக் கிளை சொல்லிக்கொண்டிருக்கிறது. மரம் தன் கிளையை, அந்தப் பறவையையும் சேர்த்து நம்புகிறது பூரணமாக. …………………………………………………………………….கல்யாண்ஜி …. . ………. …. ………. ………. ………. ……….. ………எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

போர்த்திக் கொள்ளுதல்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் இருக்கிற கைலியையோ போர்த்திக் கொண்டு தூங்குவதைக் காலையில் பார்க்கும் போதெல்லாம் ஒரு போர்வை எப்படியாவது இந்த மாதம் வாங்கிவிட வேண்டும் என்று சரசு நினைப்பாள். ராத்திரி படுக்கும்வரை படித்துக் கவிழ்ந்து வைத்த வாரப் பத்திரிகையையும் கண்ணாடியையும் எடுத்து ஜன்னலில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வீடு

This gallery contains 2 photos.

  முழுதாக இருக்கும்போது கவனத்தில் விழவில்லை இடிந்து கிடக்கும்போது இம்சை படுத்துகிறது யாருடையதாகவோ இருந்த வீடு …………………………………………………………………………….கல்யாண்ஜி  

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கண்காட்சி

This gallery contains 2 photos.

இந்த சமீபத்திய கோடுகளுக்கும், இதற்கு முன் கடைசியாக வரைந்த கோடுகளுக்கும் இடையே பல பத்தாண்டு இடைவெளி கூட இருக்கும். நான் சமீபத்தில் வரையவே இல்லை. 50 ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். எழுத்தும் ஒரு வித வரைதல்தான். அதிலும் இதே வேகவேகமான, தன்னிச்சையான, பீறிடும் கோடுகள் உண்டு. அந்தக்கோடுகளில் நான் வெவ்வேறு மனிதர்களின் சாயல்களை வரைகிறேன். உங்களுக்கு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்த அர்ச்சனாவுக்கு முந்திய அர்ச்சனா

This gallery contains 1 photo.

  சென்ற விடுமுறைக்கு வந்திருந்த போதே என்னிடம் அர்ச்சனா விண்ணப்பம் செய்திருந்தாள். பக்கத்து வீட்டு ஷெர்லி அப்பா மாதிரி நான் காதல் பறவைகளும் புறாக்களும் வளர்க்க வேண்டும். அனந்த சங்கர் மாமா போல தொட்டி மீனகள் அவசியம். புதுப் புது பூச்செடி எல்லாம் பின் வீட்டு ஜோஸ் மாதிரி. முடிந்தால் ஒரு சடைநாய்க் குட்டி அவளே … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நடுவில்

This gallery contains 1 photo.

ஒரு சொட்டு மழைத் துளி தன் மீது விழுந்துவிடக் கூடாது எனும் கவனத்தில் குடை விரித்து நடையிறங்கி அலுவலகம் நீங்கும் பெண் வலப் பக்கம். எல்லாத் துளியும் என் மேல் விழட்டும் என்பதாக முற்றிலும் நனைந்து, அசையாமல் முகம் தூக்கி நிற்கிற கருப்புப் பசு. இடப் பக்கம். ஊழையும் உப்பக்கம் காணத் தாழாது உஞற்றுகிற நான் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இதைப் பற்றி

This gallery contains 2 photos.

    எல்லோரும் காதலியைப் பற்றிக் கவிதையெழுதிவிட்டுக் காதல் பற்றி எழுதியதாகச் சொல்கிறார்கள். இறந்தவரைப் பற்றி எழுதிவிட்டு மரணம் பற்றி என்கிறார்கள். ஒரு பறவையைப் பற்றி எழுதுவது பறத்தல் பற்றி அல்ல. சோப்பைப் பற்றி எழுதுவது அழுக்கைப் பற்றியது ஆகாது. கல் மண்டபங்கள் பற்றியவை நதியைப் பற்றியது அல்ல. குழந்தைகள் பற்றிய வரைதல் குழந்தைமை பற்றியது … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அப்படியெனில் நான்

This gallery contains 1 photo.

அப்படியெனில் மரணபயம் உன்னைத் துரத்தவில்லையா? இல்லை, துரத்துவது வாழ்வுதான். அப்படியெனில், வாழ்வை நீ விரும்பவில்லையா? இல்லை, விரும்புவது மரணத்தைத்தான். அப்படியெனில், நீ பொய் சொல்கிறாயா? இல்லை, உண்மை சொல்லாமல் இருக்கிறேன். அப்படியெனில், நீ என்னைப் போலத்தானா? இல்லை, நான் என்னைப் போல மட்டுமே ……………………………………………………………………………………….கல்யாண்ஜி 

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இருந்திருக்கலாம்

This gallery contains 1 photo.

ஒவ்வொரு வீடு வீடாக ஒவ்வொரு தெருத் தெருவாகப் பூத்துக் கொண்டே போனது போகிற திசையெலாம் பூச்செடி நாற்று விற்கிறவரின் சைக்கிள். அடுத்த தெருவில் கேட்கும் அவருடைய குரல் இந்தத் தெருவில் சற்றுமுன் பூத்த எல்லாப் பூவையும் பறித்துப் போகாமல் இருந்திருக்கலாம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~கல்யாண்ஜி எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணதாசனின் ஓவியக் கைகள்

This gallery contains 1 photo.

{சிறுகதைகளில் ‘வண்ணதாசன்’ ஆகவும், கவிதைகளில் ‘கல்யாண்ஜி’ ஆகவும் அறியப்பட்டவர் கல்யாணசுந்தரம். தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர்.  ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன் நானில்லை’’ என்று சொல்லிக் கொள்ளும் இவர், கவிதை, சிறுகதைகளைத் தாண்டி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறவைக்கும்

This gallery contains 1 photo.

    நீண்டு ஒடுங்கிய ஏமாற்றமாக நகர்ந்து கொண்டிருந்தது ஆறு. எப்போது தொட்டாலும் குளிர்ந்திருக்கும் கல் மண்டபத் தூண்கள் நம்பிக்கையின்மையின் வெப்பத்துடன் சாயத்துவங்கியிருந்தன. வெளிச்சம் குறைந்த கோவிலுக்குள் போக விருப்பமில்லை. வடிசாராய போதையில் எக்குத் தப்பான தாண்டவத்தில் இருக்கலாம் எம்பெருமான். மீன் கடிக்கவென காலம் அகாலமாகச் சேமித்திருந்த கால் நக அழுக்கை என்ன செய்வது?‘ ஆயுள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பூனைகள்

This gallery contains 7 photos.

வண்ணதாசனின் நினைவுகளில் படிந்துள்ள ஞாபகப் படிமங்கள் தாம் அவரது கதைகள். அவரைத் தேடிவந்த முதல் வாசகர் நம்பிராஜனும், அவரது முதல் கதைத் தொகுப்பான ‘கலைக்க முடியாத ஒப்பனைகளை’ வெளியிட்ட சேலம் ‘அஃக்’ பரந்தாமனும் இன்றும் அவரது ஞாபக அடுக்குகளில் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். சிறு வயதில் காது வைத்தியதிற்காக வைத்தியரின் கிளினிக்குப் போகும் வழியில் பார்த்த சிவப்பாக … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பின் நிகழவிருப்பவை

This gallery contains 1 photo.

இந்தப் புகைப்படத்தில் இடது புறமிருந்து நாலாவதாக நிற்கிறேன். நான் அடிக்கடி விருப்பத்துடன் அணியும் கட்டமிட்ட சட்டை என்னை உங்களுக்கு நினைவூட்டும். இந்தக் கவிதைத் தொகுப்பைப் பெற்றுக்கொண்டவர் கலந்துகொள்ளும் கூட்டமுண்டு எதிர்வரும் சனிக்கிழமை. நீங்களும் அழைக்கப் பட்டிருக்கலாம். வெளியிட்ட அந்தப் பெண் தான் இப்போது இல்லை. முகத்துச் சிரிப்பில் தற்கொலைக்குறிப்பின் முன்னடையாளம் எதுவும் காணோம். சமீப காலக் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எல்லாம் ஒரு

This gallery contains 1 photo.

மகான் இறந்து போனார். மகான் இருக்கிறார். நானும் இறப்பேன். நானும் இருப்பேன். எல்லாம்    ஒரு நம்பிக்கைதான்.   ……………………………………………………………………கல்யாண்ஜி

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கனிவு மட்டுமே

This gallery contains 1 photo.

கல்யாண்ஜி       உங்களுக்கென்ன? மரம் அறிந்தே இருந்தது. நீங்கள் புசிக்கவும் அவசியமில்லை. எறியவும் எந்த முகாந்திரமும் இல்லை. உள்ளிருந்து ஊர்ந்து நெளிந்து உங்களை நோக்கி முழுதாக வெளிவரும்வரை,   கனியை முற்றிலும் மறந்து புழுவை மட்டும் கவனியுங்கள். கனியும் உங்களுடையதல்ல. புழுவும் உங்களுடையது அல்ல. இந்தக் கனிவு மட்டுமே உங்களுடையது.   ………………………………………………………………..கல்யாண்ஜி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

வாழ்வின் அடுக்குகள்

This gallery contains 2 photos.

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள். இந்தத் தலைப்புப்போல அத்தனை பொருத்தமான தலைப்பு கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதி வேறு ஏதாவது வெளிவந்திருக்கிறதா தெரியவில்லை. ஒருவகையில் அது கல்யாணி அண்ணனின் மனதை வெளிப்படுத்தும் ஒரு தலைப்பு. தமிழ்ச் சிறுகதையுலகில் வண்ணதாசனின் பங்களிப்பும், தொடரும் படைப்பிலக்கியச் செயல்பாடுகளும்  நாமும் எழுதலாமே என்று பலருக்கு உத்வேகம் தந்திருக்கின்றன. நானும் அவரிடமிருந்தே … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்