Category Archives: வண்ணதாசன் கடிதங்கள்

அம்பைக்கு.. வண்ணதாசன் கடிதம்

This gallery contains 1 photo.

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

வெண்கடல்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   அன்புமிக்க ஜெயமோஹன், வணக்கம். கனவுகள் காண்கிற அதிர்ஷ்டம் இப்போது அனேகமாகக் குறைந்துவிட்டது. இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நேற்று கனவு காணும் துரதிர்ஷ்டம் எனக்கு. எங்கள் மகள் சங்கரி தாங்க முடியாமல் அழுதுகொண்டு நிற்கிறாள். நானும் அவளுடன் வாய்விட்டு அழுதபடி அவளை எங்கள் பூர்வீக வீட்டிற்கு, அதுவும் எங்கள் அம்மாவைப் பெற்ற ஆச்சி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

நாஞ்சிலுக்கு-வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் அன்புமிக்க நாஞ்சில் நாடன், வணக்கம். உங்களுக்கு மின்னஞ்சல் பெட்டியைத் திறந்துபார்க்கும் ‘சீக்கு’ உண்டா தெரியவில்லை. அது ஒருவிதமான ஒட்டுவாரொட்டி. ஒருவிதமான சூது.  சொரிமணல். ஆளை உள்ளே இழுக்கும். ஆனால், நீங்கள் அப்படியெல்லாம் லேசில் ஆழம் தெரியாமல் கசத்தில் இறங்குகிற ஆள் இல்லை. * நான் ‘இந்த என்னுடைய அறுபத்தாறு வயசில்,’இன்னியத் தேதி’ வரைக்கும் இவ்வளவு சந்தோஷமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் பாமரனுக்கு எழுதிய கடிதம்

. . http://www.natpu.in/?p=4359 அன்புமிக்க பாமரன், வணக்கம். . உலகத்தில் பாமரன் என்று சொல்லப்படுபவர்களும் அழைக்கப்படுகிறவர்களும் எல்லாம் உங்களைப் போல இவ்வளவு கூர்மையும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். பாரதிய வித்யாபவன் வாசலில் நெஞ்சில் இருக்க உங்களையும்,. உங்கள் மகன் சேகுவேராவையும் இன்னும் பெயர் மறந்துபோன, முகம் தங்கியிருக்கிற மேலும் சில மனிதர்களையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கனகதூரிகா- வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 4 photos.

வண்ணதாசன்

More Galleries | Tagged | 2 பின்னூட்டங்கள்

இர.சாம்ராஜ் – வண்ணதாசனின் கடிதங்கள்

This gallery contains 10 photos.

உலக சரித்திரத்தைக் கூட எளிதாய் எழுதிவிடலாம் போல. மிக்க் கடினமானது மிக நெருக்கமாக உணர்கிற ஒருவரைப்பற்றி இப்படி ஒரு சிறு குறிப்பு எழுதுவது.ஒரு வரிகூட இல்லாமல் ஒரு முழு வெள்ளைப் பக்கத்தை விட்டு விடுவதுதான் சரியாக இருக்கும். இந்த சமீபத்திய எட்டு, ஒன்பது ஆண்டுகளில் என்னை மிகவும் புரிந்திருக்கிற, நான் மிக அதிகம் அந்தரங்கமாக என்னையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் கடிதங்கள் – தீப. நடராஜனுக்கு

This gallery contains 1 photo.

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=906 31-10-2006 அன்புமிக்க தீப.நடராஜன் அவர்களுக்கு, வணக்கம். சற்று முந்தித்தான் ராஜு ஆட்டோவில் புறப்பட்டான். எத்தனை வயதானாலும்,நமக்கும் சரி பிள்ளைகளுக்கும் சரி, இப்படிப் பத்துநாள் எட்டிப் பார்த்துவிட்டுப் போவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. சொல்லப் போனால், என் தனிப்பட்ட அனுபவத்தில், அவர்கள் கைப்பிள்ளைகளாக இருக்கும்போதுகூட இந்த அளவுக்குக் கஷ்டமாக உணர்ந்தது இல்லை. நாளைக்குப் போய்ச் சேர்ந்து தொலைபேசுகிறவரை, இந்த மழைக்காலத் தவளைகளின் சேர்ந்திசையைக் கேட்டுக்கொண்டு இருக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

ரவி சுப்பிரமணியனுக்கு – வண்ணதாசனின் கடிதங்கள்

This gallery contains 8 photos.

கனிகிற காலத்தில் கனிந்து நிற்கிறவர்களைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாகத்தான் இருக்கிறது. . உலகில் நல்லறங்களும் நல்லிசையும் நல்லியல்புகளும் நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது ஒரு திருவிழாப் போல நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர், ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கையாலும் சந்தனம், எல்லோர் கையாலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சில இறகுகள், சில பறவைகள்” வண்ணதாசன் கடிதங்களின் புதிய தொகுப்பு முன்னுரை

This gallery contains 22 photos.

இரண்டு நாட்களுக்கு முன் யாழினியின் கடிதம் வந்தது, யாழினியின் முதல் கடிதம் அது. யாழினிக்கு எட்டு வயது.  மூன்றாம் வகுப்புப் படிக்கிறாள். சேலத்துக்காரி. நான் எழுதியதுதான் அவளுக்கு வந்த முதல் கடிதம். எனக்கு வந்திருக்கிற பதில் அவள் எழுதிய முதல் கடிதம். சரிதான். என்னுடைய வரலாறும் அவளுடைய வரலாறும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டது. என்னுடைய கடிதங்கள் பின்னொரு நாளில் அச்சாக்கப்படும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

ராமகிருஷ்ணன் – வண்ணதாசன் கடிதம்

This gallery contains 2 photos.

வண்ணதாசன் கடிதங்கள் வீட்டிற்கு வந்ததும் என் மகள் எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு வண்ணதாசன் கவிதைகள், கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் அசந்து வைக்கும்போது நான் படித்தேன்.  அவளுடைய எண்ணங்களின் வண்ணங்களை உடனே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பகிர்தலில் தான் அழகு மேலும் அழகாய்த் தெரிகிறது. அவரது கையெழுத்தைப் படித்திருந்தால் இன்னும் அழகு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தொடர்ச்சி-வண்ணதாசன் வண்ணநிலவனுக்கு எழுதிய கடிதங்கள்

This gallery contains 1 photo.

எல்லோரையும் பிடுங்கி நட்டாயிற்று. கி.ரா, சா.கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், நாஞ்சில்நாடன் எல்லோருக்கும் பிறந்த ஊர் ஒன்று இருக்கிற ஊர் ஒன்று. பூமணி, நான் எல்லாம் கிட்டத்தட்ட அதே ஊரில் இருக்கிறோம். அதே வீட்டில் அல்ல. இது பஞ்சம் பிழைக்க ஊர்விட்டு ஊர் போவதையும் விடக்கொடுமை……….வண்ணதாசன் தொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 10 photos.

நீங்களோ, நானோ, இன்னொரன்ன பிறரோ நாம் இப்படி இருப்பது குறித்து துக்கம் கொள்ளத் தேவையில்லை. நாம் இப்படி இருக்குமாறே மற்றவர்கள் எல்லாம் அப்படி இருக்கிறார்கள். இந்த — வயதின் புறவுலக அகவுலக ஷீணங்களுக்கு மத்தியிலும் பார்க்கிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நுட்பமான ஒரு இடத்தை எனக்குக் கொடுத்து விடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒக்கலில் வைக்காத குறைதான் … … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கலாப்ரியா-வண்ணதாசன் (ஜெயமோகன்) கடிதம்

This gallery contains 1 photo.

http://www.jeyamohan.in/?p=21664 அன்புமிக்க ஜெயமோகன், வணக்கம். இந்த தினத்தை உங்களின் “ தேர் திரும்பும் கணங்கள்” வாசிப்பின் வழி துவங்க வாய்த்தது. எவ்வளவு அனுபவிப்பு, எத்தனை உண்மை உங்களுடைய ஒவ்வொருவரியிலும், சொல்லிலும். மனசார எழுதியிருக்கிறீர்கள். இப்போது நான்அடைந்திருக்கும் நெகிழ்வை எப்போதாவது மட்டுமே அடைய முடியும். நீங்கள் தொடர்ந்து கோபாலுக்கு, அவனுடைய கவிதைகளையும் இந்தக்கட்டுரைகளையும் முன்வைத்துச் செய்திருப்பவை, ஒருவகையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாதவராஜ் குறித்து எஸ்.வி.வேணுகோபாலனுக்கு

This gallery contains 1 photo.

வண்ணதாசன் கடிதங்கள்   அன்புமிக்க வேணுகோபாலன், வணக்கம். எனக்கு தமிழ்ச் செல்வன் போல, மாதவராஜையும் பிடிக்கும். அவருக்கு கோவில்பட்டி இடதுசாரிப் பள்ளிக்கூடத்து மாணவர்களிடம் இருப்பதாக நான் உணர்ந்த ஒரு நெகிழ்ச்சிக் குறைவும் இறுக்கமும்  கிடையாது. அவர் கோவில்பட்டிக்காரர் இல்லை, சாத்தூர் காரரும்  இல்லை. அவர் காலில் கழுவமுடியாமல் அப்பியிருக்கும் பிறந்த மண்  திசையன்விளையோ நாசரேத்தோ   அல்லவா. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானிக்கு- வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 6 photos.

வண்ணதாசன்  (வண்ணதாசன் கடிதங்கள் வீட்டிற்கு வந்ததும் என் மகள் எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு வண்ணதாசன் கவிதைகள், கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் அசந்து வைக்கும்போது நான் படித்தேன்.  அவளுடைய எண்ணங்களின் வண்ணங்களை உடனே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பகிர்தலில் தான் அழகு மேலும் அழகாய்த் தெரிகிறது. அவரது கையெழுத்தைப் படித்திருந்தால் இன்னும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எஸ்.ஐ.சுல்தானுக்கு – வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 5 photos.

சலாகுதீன் சார் தன் மகள் கல்யாணத்தில் அதுவரைப் பார்த்திராத இன்னொரு முகத்துடன் இருந்தார். ஏற்கனவே எது நிஜமானது எது பொய்யானது என்பதை அறிந்த அவருக்கு அந்த தினத்தின் மலர்ச்சி நிரந்தரமாக இருந்திருக்கலாம். ஆண்டவனின் பேரேட்டில் நிஜம் வேறு சொற்களில் எழுதப்பட்டிருக்கிறது போல. வண்ணதாசன்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

மனுஷ்ய புத்திரனுக்கு – வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 5 photos.

  காலையில் வீட்டை இழந்த ஒருவன், ராத்திரி வந்து அவன் வளர்த்த செடியைப் பாதுகாக்கிறான். பன்னீர்ப் பூ உதிர்ந்துகிடக்கிற இடத்தில் ஒன்றுக்குப் போக அந்தப் பள்ளிக்கூடத்துப் பையனுக்கு மனமில்லை. நெரிசல் நேரக் கண்டக்டருக்கு, பாலத்தின் உச்சி வளைவில் காற்றை உணர்ந்து ‘ஹா!’ சொல்ல முடிகிறது. கட்டடத் தொழிலாளிகள் மழை பார்க்கிறார்கள். மலையப்பசாமியை வரைகிறவரைப் பார்த்து ‘டீ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் கடிதங்கள்….கலாப்ரியா

This gallery contains 5 photos.

வண்ணதாசன்     எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்