Monthly Archives: திசெம்பர் 2010

திரும்பி வராத தினத்தில்….

வண்ணதாசன் பல தினங்களுக்கு முன், என் நண்பருடைய வீட்டில் தங்கி இருந்தேன். வாரக்கணக்கில் எல்லாம் அல்ல; இரண்டு இரவுகள், ஒரு பகல் என்று வைத்துக்கொள்ளலாம். தினங்களின் எண்ணிக்கை அல்ல… அவற்றின் அடர்த்திதானே முக்கியம்! வாதா மரத்தைப் போல் இலைகளையே பூவாக ஆயுள் முழுவதும் காட்டியபடி எத்தனையோ மரங்கள் நிற்க, இந்தச் செம்பருத்தி மட்டும் தினசரி நான்கு … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கற்றது ‘மனம்’

பரமனுக்கு எல்லோரும் பழைய ஆள்தான். பார்த்த இரண்டாவது நிமிஷமே புதிய ஆளை அவன் பழைய ஆளாக்கிவிடுவான். ஆளுக்குத் தக்க பேச்சு எல்லாம் இராது. ஆனால், ஒவ்வொரு ஆட்களின் மடியிலும் பூப்போல கைப்பிள்ளையை உட்கார்த்திவைப்பது மாதிரி கொடுக்கிறதற்கு அவனிடம் ஒவ்வொன்றுஇருக்கும். அன்றைக்கு இரவு நல்ல மழை. சினிமாக் கொட்டகைக்குள் இருக்கும்போது பெய்கிற மழை ஒரு சாதாரண சினிமாவைக்கூட … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | பின்னூட்டமொன்றை இடுக

கேணி சந்திப்பு – வண்ணதாசன்

http://thittivaasal.blogspot.com/2010_12_01_archive.html   கிருஷ்ண பிரபு உச்சிக் கிளையில் இருக்கும் தேன்கூட்டைப் பார்த்திருக்கிறீர்களா? தேனடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வழவழப்பான தேனீக்கள் தான் எத்தனை அழகு! வெயிலில் மின்னும் அந்த கரிய நிறத்திற்கு ஈடுஇணை எது? ஞானியின் வீடும் இந்த மாதம், தேன்கூட்டைப் போலவே இருந்தது. வாசற்கதவை பிடித்துக் கொண்டும், ஜன்னல் சட்டத்தில் தொங்கிக்கொண்டும், வழிப்பாதையில் சம்மனமிட்டும், சமையல் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் நேர்காணல் | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!!

http://blog.balabharathi.net/?p=805 இந்த 65வயதில் எனக்கவே, என் எழுத்தை படித்த வாசகர்களுடன், என் பேச்சை கேட்க வந்த ஒரு கூட்டத்தில் பேசுவது இது தான் முதல் முறை. உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனது உரையைத் தொடங்கினார் வண்ணதாசன். * வந்திருந்தவர்களில் சிலருக்கு ஆனந்த விகடனில் தொடர் எழுதியபின் தான் இவரை அறிமுகமானவர்கள் இருந்தார்கள். இது பற்றி … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எஸ்.ராமகிருஷ்ணன்-உள்ளங்கை எழுத்து

வண்ணதாசன்: உள்ளங்கை எழுத்து-   எஸ்.ராமகிருஷ்ணன்   ஏதேதோ ஊர்சுற்றி நான் அறிந்து கொண்ட நிசப்தத்தை வண்ணதாசன் தன் இருப்பிடத்தில் இருந்துகொண்டே அறிந்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியாக உள்ளது அவரது ‘கூறல்’ என்ற கதை. ‘ஒரு துண்டு தோசை வாயில் இருக்கிற நிலையிலே தாத்தா அழுவதைப் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியவில்லை’ என்று துவங்கும் இக்கதை, காது கேளாத ஒரு … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?”

”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?” இந்தக் கேள்வி காதில் விழுகையில் நான் ஏழுவளவு தாண்டி, திருநாவுக்கரசு மாமா வீடு தாண்டிப் போய்க்கொண்டு இருக்கிறேன். பிறந்து வளர்ந்த வீடு இருக்கிற தெருவில் ரொம்ப வருடங்கள் கழித்து நடந்து போகிறவனுக்கு என்னவெல்லாம் மனதுக்குள் நிகழுமோ, அவ்வளவும் என்னுள் நிகழ்ந்துகொண்டு இருந்தது. மேட்டு வீடு என்றும், மாம்பழக் கடை ஆச்சி … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

என் கையில் விழுந்த சாக்லேட்!

என் கையில் விழுந்த சாக்லேட்! “வண்ணதாசன்” எழுதிய “அகம், புறம்” அனுபவக் கட்டுரைத் தொடரில் நான் ரசித்த பகுதியை இங்கே போடுகிறேன். “பெயரை அறிவது ஒரு நெருக்கம் உண்டாக்குகிறது அல்லவா? அந்த உணர்வுடன் தான் சேர்ந்த வேலை, இப்போது செய்கிற வேலை, சம்பளம், குழந்தைகள் பற்றி எல்லாம் அந்தப் பெண் சொல்லிப் பகிர்ந்திருக்கிறார். “ஒரு தோழமை … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மரம்

மரம் எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால், சீட்டுக்கட்டு க்ளாவர் மாதிரி இருக்கும். எத்தனையோ வருஷங்களாக அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அப்படியேதான் இருக்கிறது. இப்போதும் ஒரு சாயலில் அது பச்சை க்ளாவர்தான். முன்பைவிட அடர்த்தியாக, அழகாக, கிளையும் இலையுமாக இருக்கிறது. அறுபது வருடங்களில் நமக்கு என்னவெல்லாம் ஆகிவிடுகிறது. அதற்கு ஒன்றும் ஆகவில்லை. செழிப்பாக இருந்தது. வாலிபம் திரும்பின … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘அபிதா’

நான் பழுத்திருந்தபோது பழம் கடிக்க வராமல் உளுத்துவிட்டதும் புழு பொறுக்க ஓடி வரும் மனம் கொத்தி நீ!’ – இதை நான் எழுதி இருபத்தைந்து வருடங்கள்கூட இருக்கலாம். கவிதைக்கு ‘அபிதா’ என்ற தலைப்புக் கொடுத்திருந்தேன். லா.ச.ரா-வின் தலைப்பு. இதழ்கள், பச்சைக் கனவு, ஜனனி என்றும், புத்ர, சிந்தா நதி, பாற்கடல் என்றும் பரந்து அலையடித்துக்-கிடக்கிற லா.ச.ரா–வின் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

மனநிலை???

நீங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரி யரை மனநிலை தவறியவராகப் பார்த்திருக்கிறீர்களா? உங்களோடு படித்தவர்களை அடையாளம் காண முடியாத தோற்றத்தில்… ஆனால், அடையாளம் காட்டுகிற அசைவுகளுடன் பக்கத்து நகரத்தின் சாலைகள் ஒன்றில் கண்டதுண்டா? நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்க்கக்கூடும். அதற்கான சாத்தியங்களுடன்தான் இந்த வாழ்க்கையின் வெவ்வேறு கோணங்கள் இருக்கின்றன. உங்களின் இந்த தினத்தை மைனாக்களின் குரல்கள் திறந்துவைக்கின்றன. … Continue reading

Posted in வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன் சொல்கிறார்

வண்ணதாசனைப்பற்றி நாஞ்சில் நாடன் சொல்கிறார் வண்ணதாசனின் “அன்பெனும் பிடி” சொடுக்குக: http://nanjilnadan.wordpress.com/2010/12/05/வண்ணதாசனின்-“அன்பெனும்-ப/

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் சொல்கிறார்

ஜெயமோகன் சொல்கிறார் சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிலசமயம் மழைக்குப்பிந்தைய இளவெயிலாக காற்று விரிந்து கிடப்பதை நாம் காண நேர்வதுண்டு. சிலசமயம் இருளில் நாம் ஆழ்ந்த தனிமையுடன் துயருடன் இருக்கையில் நம்முடன் மிக அந்தரங்கமாக காற்றும் இருப்பதுண்டு. இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒட்டுதல்-வண்ணதாசன்

This gallery contains 1 photo.

ஒட்டுதல்-வண்ணதாசன் ஒட்டுதல்  வண்ணதாசன் குளியலறையை விட்டு வெளியே மஹேஸ்வரி வரும்போது செஞ்சு லட்சுமியும் அவள் கணவரும் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அம்மா குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். செஞ்சுதான் பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘எங்கே போகப் போகிறாள். ஏற்கனவே பார்த்த ஆபீஸ். ஏற்கனவே பார்த்த வேலை ‘ என்று என்னென்னவோ சொல்வது கேட்டது. … Continue reading

More Galleries | Tagged , , | 1 பின்னூட்டம்