Monthly Archives: செப்ரெம்பர் 2011

நிரம்பியும் நிரம்பாமலும் நிரம்பியபடிக்கு

This gallery contains 2 photos.

என்னுடைய  வேலை   அடிப்படையான  ஊர்  மாறுதல்களால்  என்னுடைய   நிலக்  காட்சிகள்  மாறிக் கொண்டே  இருப்பினும் ,மனிதர்கள்  மாறாமல்  மனிதர்களாவே  இருந்தார்கள் . அப்படி மாறினும்   மேன்மக்களாகவே  மாறினார்கள் .கலையும் இலக்கியமும்  கிழமைக்கிடையிலும்  மேன்மையுறுபவர்க்குத்தானே எழுந்து  நின்றும் ,நகர்ந்து  சென்றும்  இடம்  கொடுத்து  மரியாதை  செய்யும் .ஈரம்  நிரந்தரம்  என்பதில்  இப்போதும் எனக்குச்  சந்தேகமில்லை தான். ஆனால்  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மீண்டும் அதன் அதன் பற்றி

This gallery contains 1 photo.

 கல்யாண்ஜி   வாடா மல்லிப்பூ மாலைக்கு    வசீகரமில்லை. தனிப் பூவுக்கோ  தாங்க முடியாத அழகு. மண்புழுக்களை நேசிக்கிற  மனம் இன்றும் இருக்கிறது. அதன் அதன் காரியங்களை  அது அது அவரவர், காரியங்களை அவரவர் ஒப்பிட ஒன்றுமில்லை  ஒரு கூழாங்கல்லை  இன்னொரு கூழாங்கல்லுடன்  ஒரு குன்னி முத்துப்போல்  பிறிதொன்றில்லை. தருவித்து விடாது  ஒரு வேப்பங்கன்றின் காற்றை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அழைக்கிறவர்கள்

This gallery contains 8 photos.

தேர்ந்த ஓவியனின் சித்திரங்களை போலவே வண்ணதாசனின் கதை மாந்தர்களும். இவ்வோவியங்கள் கால ஓட்டத்தில் தொலைத்த உறவுகளை/நினைவுகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.ஓவியத்தில் ஒளிந்திருப்பது தொலைத்த நட்பாகவோ.. மறக்கவியலா காதலியாகவோ….கண்டதும் கைபிடித்து கொள்ளும்,எங்கோ தூரத்து சிறுநகரில் வசிக்கும் சித்தப்பாவாகவோ,மதினியாகவோ இருக்கலாம். நினைவில் புதைந்து கிடந்த சில முகங்களை மீண்டும் காண வேண்டும் என்கிற ஆவலை கிளறிவிட்ட எதார்த்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தொடல்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   பரவசப் படுத்தாதே. கிளர்ச்சியூட்டவும் வேண்டாம் சிலிர்ப்புத் தருவதும் உன் காரியமில்லை. அதிர்விப்பதும் உனக்கு அப்பாற்பட்டது. வெறுமனே தொடு மனதை, போய்க் கொண்டிருக்கும்போதே உரசும் எதிர்த்தலை புல்லுக்கட்டுப் போல

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிதிபட

This gallery contains 1 photo.

வண்ணதாசன் ‘ உன்னை யாரு வரச் சொன்னாண்ணு வந்து நிக்க ? ‘ முத்து படுத்துக் கிடந்த ஜமுக்காளத்திலிருந்து அப்படியே சிகரெட்டோடு எழுந்து வந்த போது பொன்னுலட்சுமி வாசலிலேதான் நின்றாள். ஒரு வித மட்டி ஊதாக் கலரில் பெயிண்ட் அடித்த ஒரு கதவு சாத்தியிருக்க, கையில் சற்றுக் கனமாகத் தொங்குகிற பையுடனும் இன்னொரு கையில் ஊரிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நான்

This gallery contains 2 photos.

வழியில், தென்படுகிற கல்மண்டபங்களும் சில வற்றாத நதிகளும தற்காலிக ஆசுவாசம் அளிக்கின்றன. நதியும் மணலற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை அது தன் நீர்மையை மணலால் உச்சரித்துக் கொண்டுவந்தது. அள்ளப்பட்ட மணல், கலக்கிற சாயக்கழிவுகளில் மீன்கள் மூச்சுத்திணறுகின்றன. நீந்துகிற மீன்களையல்ல, அதிகாலையில் இறந்து ஒதுங்கியிருக்கிற மீன்களைப் பற்றியே இந்த தினத்துக் கவிதை………… வண்ணதாசன் எஸ்.ஐ  சுல்தான்

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

வண்ணதாசன் முன்னுரை- பெய்தலும் ஓய்தலும்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   இது கூட நன்றாகத்தான் இருக்கிறது. ஒரு தொகுப்பை அச்சுக்குக் கொடுத்துவிட்டு அதில் சேர்க்கப்பட வேண்டிய கதையை எழுதுவதற்குப் பேனாவைத் திறப்பது. புதுமைப்பித்தன் 99 சிறுகதைகள் எழுதியிருப்பதாக ஒரு கணக்குச் சொல்வார்கள். புதுமைப்பித்தனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம், அவன் எழுதாமல் போன அந்த நூறாவது கதையை எழுதிவிடத்தான் முயன்று கொண்டு இருப்பது போல் எனக்குத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என் பொறுப்பு

This gallery contains 2 photos.

கனவுகள்கூட நாம் மூடி வைத்திருக்கிற பகுதிகளை, அப்படி அவ்வப்போது கிளிஞ்சல்களைப்போலத் திறந்துவைப்பதுதானோ என்னவோ! எல்லோர் பார்வையிலும் திறந்து பார்க்க முடியாததை, பார்க்க அனுமதியற்றதை, ஒரு கனவின் ரகசியப் பேழையில் வைத்துப் பார்த்துக்கொள்கிறோமோ? ஒளித்துவைத்துப் படிக்கிற புத்தகங்களை, கனவின் விரல்கள் புரட்டிக் காட்டுகின்றனவோ? எனக்கு வாசிக்கத் தெரியாத புல்லாங்குழலை, என் கனவுகள் வாசிக்குமோ? வண்ணதாசன்     … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சைகைகள் மூலம் செய்திகள்

This gallery contains 10 photos.

 வண்ணதாசன் எழுத்துக்கள் அப்படியானவை. இலக்கியச் சிந்தனை தொகுப்பில் வந்த அவரது ‘தனுமை’தான் நான் முதலில் படித்த அவரது கதை. தனு நடந்து சென்ற அந்தப் பாதையை ஏக்கத்தோடும், தவிப்போடும் பார்த்துக் கிடந்தேன். அதற்குப் பிறகு அவரது பல கதைகளை படித்ததில், தமிழ் இலக்கியப் பரப்பில் வண்ணதாசனும், வண்ணநிலவனும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களாய் இருந்தார்கள். வண்ணதாசன் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிக்க நன்றி, எழுத்தாளர் வண்ணதாசன்!

மாதவராஜ் June 21, 2010 சனிக்கிழமை சாயங்காலம் லேசான மழைத் தூறலில் நனைந்துகொண்டுதான் திருநெல்வேலிக்கு பஸ் ஏறினேன். ஜன்னலோர இருக்கை கிடைக்காமல் போனதில் சின்ன ஏமாற்றமிருந்தாலும், அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரைத் தாண்டி ஈரம் படர்ந்த வெளி அழகாய்த் தெரிந்தது. எவ்வளவோ முறை பார்த்த அதே  மரங்கள், அதே கட்டிடங்கள், அதே கரிசல்காடு என்றாலும் புதுசாய் காட்சியளித்தன. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாதவராஜ் குறித்து எஸ்.வி.வேணுகோபாலனுக்கு

This gallery contains 1 photo.

வண்ணதாசன் கடிதங்கள்   அன்புமிக்க வேணுகோபாலன், வணக்கம். எனக்கு தமிழ்ச் செல்வன் போல, மாதவராஜையும் பிடிக்கும். அவருக்கு கோவில்பட்டி இடதுசாரிப் பள்ளிக்கூடத்து மாணவர்களிடம் இருப்பதாக நான் உணர்ந்த ஒரு நெகிழ்ச்சிக் குறைவும் இறுக்கமும்  கிடையாது. அவர் கோவில்பட்டிக்காரர் இல்லை, சாத்தூர் காரரும்  இல்லை. அவர் காலில் கழுவமுடியாமல் அப்பியிருக்கும் பிறந்த மண்  திசையன்விளையோ நாசரேத்தோ   அல்லவா. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இந்த நுணியும் இன்னொரு நுணியும்

This gallery contains 1 photo.

சக்தி ஜோதி பொதிகை தொலைக்காட்சியின் ’கொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சியில் கவிஞர் சக்தி ஜோதி வாசித்த ”இந்த நுணியும் இன்னொரு நுணியும்” எனும் கல்யாண்ஜியின் கவிதை வீடியோ.   எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பார்ப்பதன் அழகு

This gallery contains 1 photo.

கல்யாண்ஜி     அபிநயிக்கிற வெறும்பெண் என்று சிநேகிதன் அறைச்சுவர்ச் சித்திரத்தை நெருங்கிப் பாராமல் புழுங்கிக் கொண்டு இருந்தேன். ஒரேநாளில் கண்ணில் விழுந்தது அவளுடைய கை சுற்றும் தக்ளி, இன்னொருகைப் பஞ்சு இழுக்கிற நூல் தினம்தினம் பார்ப்பதன் அழகு இன் னொரு தினம் தெரியும் என் பது தெரிய- உற்றுப் பார்க்கிற குணத்தில் நம்பிக்கை அற்றுப்போயிற்று. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கனவுகள்

This gallery contains 3 photos.

கல்யாண்ஜி    

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கூடுவிட்டு

This gallery contains 1 photo.

வண்ணதாசன் ‘சுந்தரம், எப்போ வருவே’ என்று கேட்டுக்கொண்டே லீலாக்கா எழுந்து வந்தாள். கையில் கோலப்பொடிக்கிண்ணம் இருந்தது. பாதி மடங்கினது போல உட்கார்ந்து அவள் போட்டுக் கொண்டிருந்த கோலம், ஒரு பசளைக்கொடி மாதிரி தெருவில் படர்ந்து கொண்டிருந்தது. பனியில் நனைந்த தெரு ஏற்கனவே அழகாக இருக்க, என் டி.வி.எஸ்.50ன் முன்விளக்கு வெளிச்சத்தில் கோலப்பொடி மினுங்க, லீலாக்கா சிரித்துக்கொண்டே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தாவர வண்ணங்களால் வரையப்பட்ட சித்திரங்கள்

This gallery contains 8 photos.

சக்தி ஜோதியின் கவிதைகள் திறந்தே இருப்பவை. எந்தப் பிரத்தியோகச் சாவிகள், கடவுச் சொற்கள், மூன்றிலக்க எண் திருக்கல்கள் தேவைப்படாதவை அவை. காதல் எனினும், காமம் எனினும் ஒரு மொட்டு எவ்வளவு மூடியிருந்ததோ அவ்வளவு மூடுதல். ஒரு கனி தன்னை எவ்வளவு போர்த்தியிருந்ததோ அவ்வளவு போர்த்துதல் மட்டுமே. பூப்புக்கும் கனிவுக்கும் அளிக்கப்படும் இயற்கையின் எளியப் பாதுகாப்பை மட்டுமே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரதிபலிக்கும் நிஜ மாயை

This gallery contains 9 photos.

என்னுடைய 86 ஆண்டுகால வாழ்க்கையை இன்று திரும்பிப் பார்க்கும் பொழுது , தொடக்கத்தில் சிறுகதை ஆசிரியன் , கவிஞன் , மொழிபெயர்ப்பாளன் என்று கலை , இலக்கியத்தின் ஏணிப்படிகளில் ஒவ்வொன்றாக ஏறி , 2000 ஆண்டுக்கான மைய அரசின் திறனாய்வுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற பின் , கடந்த 20 ஆண்டுகால என்னுடைய வாழ்க்கையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நீ

This gallery contains 6 photos.

  காற்றின் முன்பக்கம் எது. இந்தக் கவிதைக்கு உண்டா முன்பக்கம் பின்பக்கம் ? –கல்யாண்ஜி எழுதப்பட்ட வரிகளில் இல்லை முற்போக்கும் பிற்போக்கும்.அவ்வரிகள் வாசக மனதில் உண்டாக்கும் அலைகளில்தான் அடங்கியிருக்கிறது எல்லாமே.எழுத்தில் மட்டுமே எல்லாம் அடங்கியிருப்பதும் இல்லை.அது வாசிக்கப்படும் அந்த நொடியில் -எழுத்தும் வாசக மனமும் சேரும் அந்தக் கணத்தில் என்ன மாயமும் நிகழலாம்.நிகழும்.(ச.தமிழ்ச்செல்வன்) கல்யாண்ஜி   … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்